சிமிலி உருண்டை

நெடுங்காலமாக கிராமங்களில் பரவலாக செய்யப்பட்டு வரும் ஒரு பிரபல பலகாரம் இது. எள்,வெல்லம்,வேர்க்கடலை, கேழ்வரகு என எல்லாமே ஆரோக்கியத்துக்கு உகந்த பொருட்களால் செய்யப்படுவது. மிகவும் சத்தும் சுவையுமுள்ளது. இரும்புச் சத்து மிகுந்த இந்த உருண்டையை அடிக்கடி செய்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.செய்வதும் எளிது. தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 250 g வெல்லம் - 150 g வெள்ளை எள் - 50g வேர்க்கடலை - 50g ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை நல்லெண்ணெய்/நெய் … Continue reading சிமிலி உருண்டை

சென்னாங்குன்னி இட்லி பொடி

சென்னாங்குன்னி என்பது பொடி இறால் வகையைச் சேர்ந்தது.இதனை உலரவைத்து உணவுவகைகளில் பயன்படுத்துவார்கள். கடலோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் விரும்பி உண்ணும் ஒரு பொடி வகை இது.பொதுவாக உளுந்து அரைத்து செய்யப்படும் சாதாரண இட்லிப்பொடியை விட உலர்ந்த சென்னாங்குன்னி சேர்த்தரைத்த பொடி சுவையும் மணமும் மிக்கது. தேவையான பொருள்கள் : உளுந்து - 200g (ஒரு ஆழாக்கு) உலர்ந்த சென்னாங்குன்னி - ஒரு ஆழாக்கு காய்ந்தமிளகாய் - 10-12 மிளகு - 1 tsp சீரகம் - 1tsp பூண்டு … Continue reading சென்னாங்குன்னி இட்லி பொடி

மட்டன் புளிக்குழம்பு

மட்டன் புளிக்குழம்பு எங்கள் குடும்பங்களில் பிரபலமாக செய்யப்படும் ஒரு குழம்பு வகையாகும். குருமா,க்ரேவி, போன்றவை அலுத்துப் போகும் நேரங்களில் இதை செய்வதுண்டு. கறிச்சாறு இறங்கிய குழம்பில் சேர்க்கப்பட்டு ஊறிய காய்கறிகள் உண்பதற்கு அத்தனை சுவையாக இருக்கும். தேவையான பொருள்கள் : மட்டன் : அரை கிலோ கருணைக்கிழங்கு - 200g முருங்கைக்காய் - 2 கத்தரிக்காய் - 200 g சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 2 பச்சைமிளகாய் -2 தேங்காய் கீற்று -3 … Continue reading மட்டன் புளிக்குழம்பு

பொரியரிசி உருண்டை

நாகை மாவட்டத்து வேளாங்கண்ணி நகரில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் ஒரு இனிப்பு வகை இது. வறுத்த புழுங்கலரிசியில் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் இந்த பொரியரிசி உருண்டை மிகவும் சுவையானது.சத்துள்ளது.செய்வதற்கும் மிகவும் எளிது.மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். தேவையான பொருள்கள் : புழுங்கல் அரிசி : 200 g வெல்லம் : 350 g தேங்காய் : அரை மூடி ஏலக்காய்த்தூள் : சிறிதளவு நெய் : 25 g செய்முறை : 1.தேங்காயை துருவலாகத் துருவி … Continue reading பொரியரிசி உருண்டை

மட்டன் பருப்புக் குழம்பு

மட்டன் பருப்புக்குழம்பு எங்கள் வீட்டில் பிரபலமான ஒரு யூனிக் ரெசிப்பி.. அம்மாவிற்கு பின் இதை செய்வதையே நெடுங்காலம் மறந்திருந்தேன்.என் மச்சினரின் மனைவி சமீபத்தில் ஒருமுறை இதை அருமையாக செய்திருந்தபோது திரும்பவும் நினைவுக்கு வந்துவிட்டது. இதை மட்டன் தால்ச்சாவுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளவேண்டாம். தேவையான பொருள்கள்: மட்டன் - 1/2 கிலோ துவரம்பருப்பு - 100g மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் குழம்புமிளகாய்த்தூள் -4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் புளி … Continue reading மட்டன் பருப்புக் குழம்பு

ஈஸி சாக்லேட் கேக்

கேக் செய்வதென்றாலே நேரமெடுக்கும் வேலை தான்.அதிக சிரமமில்லாமல், அதிக மெனக்கெடல் இல்லாமல் ஈஸியாக சில நிமிடங்களிலேயே மாவு தயார் செய்து சுவையான கேக் பேக் செய்துவிட முடியுமென்றால்?..அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் கேக்.. தேவையான பொருட்கள் : மைதாமாவு : 400g சர்க்கரை : 400g கோகோ பவுடர் : 150g முட்டை : 4 பால் : 200 மிலி வெண்ணெய் : 200g வனிலா எசன்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர் :1 … Continue reading ஈஸி சாக்லேட் கேக்

வறுத்தரைச்ச மட்டன் மிளகு குழம்பு

மட்டனை பொதுவாக குருமா,க்ரேவி,புளிக்குழம்பு,வதக்கல், வறுவல்னு செய்வதே வழக்கம்.இந்த வறுத்தரைச்ச மிளகு குழம்பு அதிலிருந்தெல்லாம் சுவையில் வேறுபட்டது.மிளகு சீரகம் சேர்ப்பதால் உடல்நலத்திற்கு நல்லது. பனிக்காலங்களில் செய்ய ஏற்றது. ஜலதோஷம் பிடிக்கும் நேரங்களில் செய்து உண்டால் சுவையற்ற நாக்குக்கு ஏதுவாக இருக்கும். தேவையான பொருள்கள் : மட்டன் - அரை கிலோ சின்ன வெங்காயம் -15 தக்காளி -2 பச்சைமிளகாய் - 4 தேங்காய் - அரைமூடி கொத்துமல்லித்தழை - சிறிதளவு மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு தனியா … Continue reading வறுத்தரைச்ச மட்டன் மிளகு குழம்பு

பருப்பு தால்ச்சா

சென்னையில் பிரியாணிக்கு தயிர்பச்சடியும்,கத்தரிக்காய் க்ரேவியும் தான் பிரபலம்.ஊர் பக்கங்களில் பிரியாணிக்கு பருப்பு தால்ச்சா தான் அதிகம் சைட்டிஷ்ஷாக பயன்படுத்தப் படுகிறது.பாய் வீட்டு கல்யாணங்களில் தவறாமல் பரிமாறப்படும் பருப்பு தால்ச்சா இது.மட்டன் போட்டு செய்யும் வகை இன்னொரு நாள் பதிவேற்றுகிறேன்.நான் செய்த அளவுகளை தந்துள்ளேன்.குறைவாக செய்ய விரும்புவோர் பருப்பு அளவுகளை குறைத்துப் போட்டு செய்யவும். தேவையான பொருள்கள் : துவரம்பருப்பு - 150g கடலைப்பருப்பு -100g தேங்காய் - 3 கீற்று புளி - நெல்லிக்காய் அளவு முருங்கை … Continue reading பருப்பு தால்ச்சா

ஈஸி வனிலா கேக்

அம்மாவிடம் சமையல் கற்றாலும் காலப்போக்கில் என் சமையலில் பல ஊர் சமையலின் தாக்கங்கள் தெரிவதுண்டு..ஆனால் இந்த பேஸிக் வனிலா கேக் ரெசிப்பியை மட்டும் துளியும் மாற்றவேயில்லை.. மென்மையான ஈரப்பதமுள்ள சுவையான பஞ்சு போன்ற கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இந்த கேக்கில் சிறிதளவு வொய்ட் ரம் சேர்ப்பது வழக்கம்(சுவையும் மணமும் கூடும்).விருப்பமில்லாதவர்கள் சேர்க்க வேண்டாம். தேவையான பொருள்கள் : வெண்ணெய் -500g அரைத்த சர்க்கரை -500g மைதா மாவு - 500g முட்டை - 8 பேக்கிங் … Continue reading ஈஸி வனிலா கேக்

நெய்யுருண்டை

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் வீடுகளில் தவறாமல் செய்யப்படும் ஒரு ஸ்வீட் இந்த நெய்யுருண்டை..மிகவும் சுவையானது.செய்முறையும் எளிதுதான்.உருண்டை பிடிக்கும் போது மட்டும் சற்று கை சூடு பொறுக்க பிடிக்க வேண்டும். தேவையான பொருள்கள் : பச்சரிசிமாவு - 1/4 கிலோ அரைத்த சர்க்கரை - 150g சிறுபருப்பு - 50g ஏலக்காய் - 6 நெய் - 100g செய்முறை : 1.சிறுபருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். 2.ஏலக்காய் தோல் நீக்கி பொடித்துக் … Continue reading நெய்யுருண்டை