நாட்டுக் கோழிக்குழம்பு (ஆரணி ஸ்பெஷல்)

என்னுடைய மாமியார் வீட்டு ஸ்பெஷல் இந்த குழம்பு. மிக்ஸியில் அரைத்தால் சுவை குறைந்துவிடும் என்று இன்றும் மசாலா அம்மியில் அரைத்துச் சேர்க்கிறார்கள்.நமக்கு அது கடினமென்பதால் மிக்ஸியிலேயே அரைத்துச் செய்வோம்😊.நாட்டுக்கோழி வாங்கும்போது ஒரு கிலோ அளவில் உள்ளதை வாங்க வேண்டும்.பெரிய அளவு கோழியில் கறி முற்றலாய் சக்கை போல இருக்கும். தேவையான பொருள்கள் : நாட்டுக்கோழிக்கறி - அரைகிலோ சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 3 தேங்காய் - 3 கீற்று கொத்துமல்லித் தழை - … Continue reading நாட்டுக் கோழிக்குழம்பு (ஆரணி ஸ்பெஷல்)

உலையாப்பம்

சில பாடல்கள் புகைப்படங்கள் மட்டுமல்ல சில உணவுகளும் டைம்மெஷின் போல நம்மை கடந்த காலத்துக்கு இழுத்துச் செல்லக் கூடியவை.😃 என் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் அடிக்கடி செய்யக்கூடிய பலகாரமான உலையாப்பத்தை இன்று செய்தபோது அதை உணர முடிந்தது. சுவையான இந்த உலையாப்பம் செய்வதற்கு எளிமையானதும் கூட. தேவையான பொருள்கள் : இட்லி மாவு - 1 கிலோ வெல்லம் - 300g தேங்காய் - ஒரு மூடி சிறுபருப்பு - 100g ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை … Continue reading உலையாப்பம்

உருளைக்கிழங்கு பட்டாணி பால்கறி

பச்சைப் பட்டாணி சீஸன் ஆரம்பித்த உடன் கண்டிப்பாக எங்கள் வீட்டில் செய்யப்படும் ஒரு சுவையான ரெசிப்பி இது.சோறுடன் செட்டாவதில்லை. இட்லி,தோசை,சப்பாத்தி, இடியாப்பத்துடன் நன்கு துணை சேரும். வறுத்த தனியாவின் மணம் எனக்கு பிடித்தமென்பதால் வறுத்தரைத்து சேர்த்துள்ளேன்.வறுக்காமலும் அரைத்து சேர்க்கலாம். தேவையான பொருள்கள் : உருளைக்கிழங்கு - 1/2கிலோ பச்சைபட்டாணி உரித்தது -200g தேங்காய் - அரைமூடி பச்சைமிளகாய் -10 தக்காளி -3 சின்ன வெங்காயம் - 20 இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1டேபிள்ஸ்பூன் கொத்துமல்லி சிறிதளவு தனியா … Continue reading உருளைக்கிழங்கு பட்டாணி பால்கறி

காய்கறி அவியல்

நேயர் விருப்பத்தினால் இன்று இந்த ரெசிப்பி பதிவிடுகிறேன்.செய்வதற்கு மிகவும் எளிதான அதே நேரம் சுவையான ரெசிப்பி இது.விருப்பமான காய்கறிகளை சேர்த்து செய்யலாம்.சோறு,காரடை முதலியவற்றிற்கு சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 1 வாழைக்காய் -1 கருணைக்கிழங்கு - 200 g கேரட் - 2 தேங்காய் - 3 கீற்று பச்சைமிளகாய் - 4 சீரகம் - 1/2tsp தயிர் -150g சின்ன வெங்காயம் - 5(Optional) மஞ்சள் தூள் -2 … Continue reading காய்கறி அவியல்

ஈஸி இறால் பிரியாணி

இறால் பிரியாணி ரெசிப்பி பலரும் கேட்பதால் எளிதான முறை இங்கு அப்லோடியுள்ளேன்.ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் இல்லை.பின்னொரு முறை பிரியாணி செய்யும் போது படங்கள் இணைக்கிறேன்.இறால் ஃப்ரெஷ்ஷாக பார்த்து வாங்கவேண்டும்.இறால் ஓரளவு பெரிய சைஸில் இருப்பது நல்லது. தேவையான பொருள்கள் : இறால் - 1/2 கிலோ சீரகசம்பா அரிசி - 400g வெங்காயம் - 4 தக்காளி - 4 பச்சைமிளகாய் - 6 புதினா - அரை கட்டு கொத்துமல்லி -அரை கட்டு தயிர் … Continue reading ஈஸி இறால் பிரியாணி

சிறுபருப்பு/பாசிபருப்பு பாயாசம்

சேமியா பாயாசம்,அரிசி பாயசம்,ஜவ்வரிசி பாயாசம் என்று பலவகை இருந்தாலும் பருப்பு பாயாசம் எப்போதுமே சிறப்புதான்.சிறுபருப்பும் வெல்லமும் தேங்காய்ப்பாலும் கலந்து செய்வதால் சுவையுடன் இருப்பதும் அல்லாமல் உடல்நலத்திற்கும் நல்லது.செய்வதும் எளிது. தேவையான பொருள்கள் : சிறுபருப்பு - 200g ஜவ்வரிசி - 100g வெல்லம் - 300g தேங்காய் - ஒரு மூடி தேங்காய் கீற்று - 3 முந்திரிபருப்பு - 15 உலர் திராட்சை -15 ஏலக்காய் - 6 நெய் - 2tsp உப்பு - … Continue reading சிறுபருப்பு/பாசிபருப்பு பாயாசம்

கார்ன்ஃப்ளேக்ஸ் சிக்கன்.

இதற்கு இந்த பெயர் வைத்தது 10 மற்றும் 6 வயதுள்ள தம்பி மகள்கள். KFC சிக்கன் பிரியைகளான அவர்கள் வரும்போதெல்லாம் இந்த ரெசிப்பி செய்வது வழக்கமாகிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். தேவையான பொருள்கள்: போன்லெஸ் சிக்கன் - அரை கிலோ இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் லெமன் - ஒன்று புதினா - கைப்பிடி அளவு பச்சைமிளகாய் - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு … Continue reading கார்ன்ஃப்ளேக்ஸ் சிக்கன்.

சிறுபருப்பு குருமா

இதுவும் அம்மாச்சியின் ரெசிப்பிதான். சாப்பிடுவதற்கு கும்பல் அதிகமாக இருக்கும் நேரங்களில் இட்லிக்குத் தொட்டுக் கொள்ள இந்த குருமாவை செய்துவிடுவார்கள்.பருப்பு சேர்த்து செய்வதால் பாத்திரம் நிறைந்து காணும்.எளிதான சுவையான ரெசிப்பி இது. தேவையான பொருள்கள் : சிறுபருப்பு - 100g மஞ்சள்தூள் - சிறிது மிளகாய்த்தூள் - அரை tsp கசகசா - அரை tsp தேங்காய் - 3 கீற்று பொட்டுக்கடலை -1 tsp வெங்காயம் -2 தக்காளி - 3 பச்சைமிளகாய் - 4 கொத்துமல்லி … Continue reading சிறுபருப்பு குருமா

இறால் உருண்டை குழம்பு

இறாலில் கட்லெட், வடை, தொக்கு, குழம்பு என்று தான் அதிகம் செய்வார்கள்.வித்தியாசமாக இன்று இறால் உருண்டை குழம்பு.குழம்பில் ஊறிய இறா உருண்டைகள் மிகவும் மென்மையாக வாயில் கரைந்துவிடும். சுவையும் அதிகம். தேவையான பொருள்கள் : இறால் : 1/2 கிலோ தேங்காய் - அரை மூடி பொட்டுக்கடலை - 100g புளி - எலுமிச்சம் பழம் அளவு குழம்பு மிளகாய்த்தூள் -5 tsp மஞ்சள் தூள் - சிறிதளவு சோம்பு - 1 tsp நல்லெண்ணெய் - … Continue reading இறால் உருண்டை குழம்பு

மலிதா

மலிதா என்றறால் ஸ்கூல் லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகும்போது உண்ட நினைவுகள் பசுமையாக. அம்மா வீட்டிலும் அடிக்கடி செய்ததுண்டு.என் பிள்ளைகள் இதை தண்ணி பூரி என்பார்கள்..மலிதா மிகவும் ஈஸியான சுவையான வித்தியாசமான ரெசிப்பி. வழக்கமான ஸ்நாக்ஸுகள் போரடிக்கும் போது இதை செய்து தரலாம். தேவையான பொருள்கள் : மைதா - கால் கிலோ தேங்காய் - ஒரு மூடி சர்க்கரை - 100 g ஏலக்காய்த்தூள் -சிறிதளவு (optional) உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை : … Continue reading மலிதா