கசகசா உருளைக்கிழங்கு மசாலா (ஆலு போஸ்தோ)

வறுவல்,வதக்கல்,கூட்டு என பலவிதங்களில் செய்யப்படும் உருளைக்கிழங்கு இன்று ஒரு வித்தியாசமான செய்முறையில். கசகசா அரைத்து சேர்க்கப்படும் இந்த உருளைக்கிழங்கு கறியானது ஒரு பெங்காலி டிஷ்ஷாகும்.ஆலு போஸ்தோ என்பர். பொதுவாக இதை கடுகு எண்ணெய்யில் தான் செய்வர்.அதற்கு மாற்றாக நாம் நல்லெண்ணெய்யில் செய்யலாம்.இது மிதமான காரம் உள்ள டிஷ்ஷாகும்.அதிக காரம் தேவைப்படின் பச்சை மிளகாய் அளவைக் கூட்டிக்கொள்ளலாம். சிம்பிள் மற்றும் சுவையான இந்த ரெசிப்பியின் செய்முறை👇 தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் :4 கருஞ்சீரகம் : … Continue reading கசகசா உருளைக்கிழங்கு மசாலா (ஆலு போஸ்தோ)

ஈஸி பனானா ப்ரெட்

அதிகம் பழுத்துவிட்ட வாழைப்பழங்களை வீணாக்க மனமில்லை.வழக்கமாக வாழைப்பழங்கள் மீந்து விட்டால் அதை மசித்து,கோதுமைமாவு, சர்க்கரை, முட்டை சேர்த்து பேன் கேக் போல செய்வதுண்டு.ஃப்ரிட்ஜில் முன்பு வாங்கிய வெண்ணெய் கிடக்கவே இதை செய்து பார்ப்போம் என செய்தேன். டெக்ஸ்ச்சர் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லையென்றாலும் சுவையும் மணமும் அருமையாக இருந்தது.செய்வதற்கு மிகவும் சுலபமானது. தேவையான பொருள்கள் : பழுத்த வாழைப்பழங்கள் - 4 வெண்ணெய் - 250 g சர்க்கரை - 200g மைதாமாவு - 400g முட்டை - … Continue reading ஈஸி பனானா ப்ரெட்

காஜா/பூ காஜா/மடத்த காஜா.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன் ஜார்க்கண்டில் பக்கத்து ப்ளாக்கில் வசித்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயா பாபியிடம் கற்ற ரெசிப்பி இது. பேஸ்புக்கில் தொடர்பில் இருந்தாலும் பேசி நாளாகிவிட்டது,இன்று இந்த காஜாவை செய்தபோது நினைவில் உறுத்தியவாறே. சற்றே சிரத்தையோடு செய்தால் அழகாக வரும்.சுவையாகவும் இருக்கும்.திகட்டுமளவு இனிப்பாக இல்லாமல் லைட்டாக இருக்கும் தின்பண்டம் இது. தேவையான பொருட்கள் : மைதாமாவு - 400g சர்க்கரை - 200g ரவை - 4 டேபிள்ஸ்பூன் நெய் - 50 ஏலக்காய் - … Continue reading காஜா/பூ காஜா/மடத்த காஜா.

உருளைக்கிழங்குஅப்பளக்கூட்டு

இதுவும் அம்மா வழக்கமாக செய்யும் சைட்டிஷ்களில் ஒன்று. காய்கறியை பொரியலாக செய்தால் சாப்பிடாத பிள்ளைகளும் இந்த கூட்டு வகையை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதே மெத்தடில் கத்தரிக்காய்/கருணைக்கிழங்கு/முட்டைக்கோஸ் என காய்கறி மாற்றிப் போட்டும் கூட்டு செய்வதுண்டு. காரக்குழம்பு,முட்டைக்குழம்பு,மீன்குழம்பு வகைகளுடன் சைட்டிஷ்ஷாகத் தொட்டுக் கொள்ள அருமையான காம்போ.. தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 400கிராம் கடலைப்பருப்பு - 150 கிராம்/முக்கால் ஆழாக்கு அப்பளம் - 10 சின்ன வெங்காயம் - 15 பெரிய தக்காளி - 1 பச்சைமிளகாய் … Continue reading உருளைக்கிழங்குஅப்பளக்கூட்டு

அப்பளக்குழம்பு

மலைக்காட்டுப் பிரதேசம் ஆதலால் மழை பெய்தால் 45 நாள் கூட தொடர்ச்சியாகப் பெய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான் வசித்த பகுதியில்.அதனால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் யோசிக்காமல் இந்த சுவையான அப்பளக்குழம்பை செய்துவிடுவது வழக்கம்.புளியூற்றி/ஊற்றாமல் என இரண்டு விதங்களில் இந்த குழம்பு செய்வதுண்டு.இன்னொரு விதம் பின்னர் பதிவேற்றுகிறேன். தேவையான பொருள்கள் : புளி - எலுமிச்சையளவு குழம்பு மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 3 பச்சைமிளகாய் - 3 … Continue reading அப்பளக்குழம்பு

கடலைப்பருப்பு கத்தரிக்காய் குடல் குழம்பு

இதுவும் அம்மாவின் எக்ஸ்க்ளூசிவ் ரெசிப்பி.குடல் குழம்புல கத்தரிக்காய் கடலைப்பருப்பு போடணும்னெல்லாம் எப்படி தோணியிருக்கும்னு யோசனை வருது.ஆனா ஃபைனல் ப்ராடக்டை ருசிச்சி பார்க்கும் போது ஒண்ணுக்கொன்னு எப்படி சுவையை அதிகப்படுத்துதுன்னு உணரமுடியுது. குடல் வாங்கும் போது சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கி வாங்கணும். இருமுறை உப்பு போட்டு பிசறி நல்லா பிசைந்து கழுவணும்.வினிகர் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தலா ஒரு முறை கழுவணும்.அப்போதான் வாடையேதும் இல்லாமல் இருக்கும். தேவையான பொருள்கள் : குடல் கறி : 1/2 … Continue reading கடலைப்பருப்பு கத்தரிக்காய் குடல் குழம்பு

ஸ்டஃப்டு மீட்டா பராட்டா (Stuffed Meeta Paratta)

பக்கத்துவீட்டில் வசிக்கும் பெங்காலி பாபி ஒரு நாள் இந்த டிஷ் செய்து தந்தார்கள்.அதன் சுவை மிகவும் பிடித்துப் போனதால் அவர்களிடம் ரெசிப்பி கேட்டு வாங்கி செய்து பார்த்தேன்.நன்றாகவே வந்தது.செய்வதற்கு ஈஸியானதும் கூட. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றிட இந்த ரெசிப்பியை பதிவேற்றுகிறேன். தேவையான பொருள்கள் : கோதுமை மாவு : 200g/ஒரு ஆழாக்கு வெள்ளை எள் : 2 டீஸ்பூன் வேர்க்கடலை : 100g வெல்லம் : 100g பேரீச்சம் பழம் : 5 மிளகு … Continue reading ஸ்டஃப்டு மீட்டா பராட்டா (Stuffed Meeta Paratta)

மேத்தி பூரி (வெந்தயக்கீரை பூரி)

வெந்தயக்கீரை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த கீரையாகும்.விட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்சியம்,மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.வெந்தயக்கீரைக்கு ஹிந்தியில் மேத்தி ஸாக் என்று பெயர். கீரை பிடிக்காதவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் சுவையான இந்த மேத்தி பூரியின் செய்முறை காண்போம். தேவையான பொருள்கள் : கோதுமை மாவு - 250 g வெந்தயக்கீரை - அரை கட்டு தயிர் - 100g மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 250 … Continue reading மேத்தி பூரி (வெந்தயக்கீரை பூரி)

தனியா/கொத்துமல்லி விதை துவையல்

ஜுரம் வந்து உடம்பு நன்றாகிய பின் நாக்கு ருசி கெட்டுப் போய் வாய்க்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காது.இந்த தனியா துவையல் அரைத்து ரசம் சோற்றுடன் கொடுத்தால் வாய்க்கு உணக்கையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.செய்வதும் எளிது.ருசியானதும் கூட. தேவையான பொருட்கள்: தனியா/கொத்துமல்லி விதை: ஒரு கைப்பிடி அளவு தேங்காய் : 3 கீற்று புளி : நெல்லிக்காய் அளவு உரித்த பூண்டு : 10 பல் காய்ந்த மிளகாய் : 6 நல்லெண்ணெய் : 1 டீஸ்பூன் உப்பு … Continue reading தனியா/கொத்துமல்லி விதை துவையல்

பருப்பு கொத்துமல்லி சட்னி

எளிதான ரெசிப்பியாயிற்றே.. இதையேன் பதிவேற்றுகிறேன்?. என் மகன்களைப் போன்று சமையல் கலையில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்காக எளிய சட்னி,துவையல் வகைகளை பதிவேற்ற உத்தேசம்.✌ மிகவும் நலம் பயக்கும் ஆதலால் கொத்துமல்லியை முடிந்த வரை தினமுமே உணவில் சேர்த்தல் அவசியம். தேவையான பொருட்கள் : தேங்காய் - 2 கீற்று உளுந்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அல்லது கால் ஆழாக்கு காய்ந்த மிளகாய் - 6 புளி - நெல்லிக்காய் அளவு கொத்துமல்லி - ஒரு கட்டு நல்லெண்ணெய் … Continue reading பருப்பு கொத்துமல்லி சட்னி