அப்பளக்குழம்பு

nfd
nfd

மலைக்காட்டுப் பிரதேசம் ஆதலால் மழை பெய்தால் 45 நாள் கூட தொடர்ச்சியாகப் பெய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான் வசித்த பகுதியில்.அதனால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் யோசிக்காமல் இந்த சுவையான அப்பளக்குழம்பை செய்துவிடுவது வழக்கம்.புளியூற்றி/ஊற்றாமல் என இரண்டு விதங்களில் இந்த குழம்பு செய்வதுண்டு.இன்னொரு விதம் பின்னர் பதிவேற்றுகிறேன்.

தேவையான பொருள்கள் :

புளி – எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 3
நல்லெண்ணெய் – 50 கிராம்.
மீடியம் சைஸ் அப்பளம் – 10/12
கடலை எண்ணெய் – அப்பளம் பொரிக்க தேவையான அளவு
வெல்லம் – துளி/1 கிள்ளு
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

தாளிக்க :

கடுகு,வெந்தயம்,சீரகம் – தலா அரை டீஸ்பூன்.+ கறிவேப்பிலை

வறுத்து அரைக்க :

சீரகம் : 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

செய்முறை :

1.புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

dav
dav

2.சீரகம் வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அப்பளத்தை பாதி பாதியாக கிழித்து வைத்துக் கொள்ளவும்.

nfd
nfd

3.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

nfd
nfd

4.நன்கு கிரேவி போல தக்காளி மசிந்து வந்தவுடன் குழம்புத்தூளை அதில் போட்டு வதக்கவும்.புளியைக் கரைத்து ஊற்றவும்.உப்பு போடவும்.2 நிமிடம் கொதித்தவுடன் அரைத்துவைத்த சீரகவெந்தயப் பொடியை போடவும்.
துளி வெல்லம் கிள்ளிப் போடவும்.
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் போடவும்.

mde
mde

nfd
nfd

5.மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கிழித்து வைத்த அப்பளத்தைப் பொரித்து குழம்பில் போடவும்.(அடுப்பில்/அவனில் சுட்டும் போடலாம் அப்பளத்தை)
அடுப்பை சிம்மில் வைக்கவும்.
அரை நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

nfd
nfd

6.வாசனை பிடிப்பவர்கள் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்யை பச்சையாக குழம்பில் மேலாக ஊற்றலாம்.
ஜவ்வரிசி வத்தல்/அரிசி வடாம் சைட்டிஷ்ஷாகப் பரிமாறலாம்.
குழம்பில் ஊறிய அப்பளம் மிகவும் ருசியாக இருக்கும்.
அப்பளத்தை குழம்பில் போட்டபிறகு குழம்பை அதிக நேரம் கொதிக்கவிட்டால் அப்பளம் கரைந்து போய்விடும்.
IMG_-ge82mg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s