கடலைப்பருப்பு கத்தரிக்காய் குடல் குழம்பு

nfd
nfd

இதுவும் அம்மாவின் எக்ஸ்க்ளூசிவ் ரெசிப்பி.குடல் குழம்புல கத்தரிக்காய் கடலைப்பருப்பு போடணும்னெல்லாம் எப்படி தோணியிருக்கும்னு யோசனை வருது.ஆனா ஃபைனல் ப்ராடக்டை ருசிச்சி பார்க்கும் போது ஒண்ணுக்கொன்னு எப்படி சுவையை அதிகப்படுத்துதுன்னு உணரமுடியுது.

குடல் வாங்கும் போது சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கி வாங்கணும்.
இருமுறை உப்பு போட்டு பிசறி நல்லா பிசைந்து கழுவணும்.வினிகர் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தலா ஒரு முறை கழுவணும்.அப்போதான் வாடையேதும் இல்லாமல் இருக்கும்.

தேவையான பொருள்கள் :

குடல் கறி : 1/2 கிலோ
கடலைப்பருப்பு : 150கிராம்/முக்கால் ஆழாக்கு
கத்தரிக்காய் : 1/4 கிலோ
சின்ன வெங்காயம் : 20
தக்காளி : 4
பச்சைமிளகாய் : 4
கொத்துமல்லி : சிறிதளவு
இஞ்சிபூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் : 2 டீஸ்பூன்
தேங்காய் : 3 கீற்று
கசகசா : 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் : 50 கிராம்
கிராம்பு :4
பட்டை : 2 துண்டு
ஏலக்காய் : 4
மிளகாய்த்தூள் : 3 டீஸ்பூன்
தனியாத்தூள் : 3 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் :1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் : 1/2 டீஸ்பூன்

செய்முறை :

1.சுத்தமாக கழுவியெடுத்த குடலில் மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,கரம்மசாலாத்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து குக்கரில் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.

nfd
nfd

2.கடலைப்பருப்பைக் கழுவி அடி கனமான பாத்திரத்தில் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். குழையக்கூடாது.

nfd
nfd

3.தேங்காய்,கசகசா மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும்.

dav
dav

dav
dav

4.கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு,பட்டை,ஏலக்காய் போடவும்.
பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் இஞ்சிபூண்டு பேஸ்ட்,சோம்புத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்,கொத்துமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

5.நன்கு வதங்கி வந்தவுடன் கத்தரிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

nfd
nfd

6.வேகவைத்த குடல் மற்றும் கடலைப் பருப்பைச் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கத்தரிக்காய் வேகும் வரை கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்

nfd
nfd

7.கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.

nfd
nfd

சோறு,இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி முதலியவற்றுடன் பரிமாறலாம்.
nfd
nfd

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s