மேத்தி பூரி (வெந்தயக்கீரை பூரி)

IMG_qbnkn8
வெந்தயக்கீரை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த கீரையாகும்.விட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்சியம்,மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.வெந்தயக்கீரைக்கு ஹிந்தியில் மேத்தி ஸாக் என்று பெயர். கீரை பிடிக்காதவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் சுவையான இந்த மேத்தி பூரியின் செய்முறை காண்போம்.

தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு – 250 g
வெந்தயக்கீரை – அரை கட்டு
தயிர் – 100g
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 250 மிலி (பூரி பொரிக்க)

செய்முறை :
1.வெந்தயக்கீரையை காம்பு நீக்கி இலைகளை மட்டும் உருவி வைக்கவும்.
IMG_20190306_093126897

2.மண்போக நன்கு அலசி நறுக்கிக் கொள்ளவும்.
IMG_20190306_093644319

3.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்து கொள்ளவும்.அதில் சிறிது உப்பு, மஞ்சள்தூள்,ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
IMG_20190306_093909774

4.அதோடு நறுக்கி வைத்த வெந்தயக் கீரையை சேர்க்கவும்.கைகளால் நன்றாக கலந்து பிசறி விடவும்.
IMG_20190306_094226513

5.தயிரை, பிசறிய மாவு + கீரைக் கலவையில் சேர்த்து நன்கு மிருதுவாக வரும் வரை பிசையவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.மாவு கடினமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.
IMG_20190306_094331534

6.மிருதுவாகப் பிசைந்த மாவை 5 மணி நேரத்துக்கு மூடி வைத்து விடவும்.
IMG_20190306_095601633.jpg
7.ஐந்து மணி நேரம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி மெல்லிய பூரிகளாகத் தேய்த்து பொரித்து எடுக்கலாம்.எண்ணெயில் முறுகும் வெந்தயக்கீரை வாசத்துடன் நன்கு சிவந்து வரும்.கெட்டித் தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்.
IMG_qbnkn8.jpg
*காலை டிபனுக்கு செய்ய வேண்டுமென்றால் இரவே பிசைந்து வைத்து விடலாம்.
**இந்த பூரி மிகவும் மிருதுவாக,வெந்தயக்கீரை வாசத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s