ஜுரம் வந்து உடம்பு நன்றாகிய பின் நாக்கு ருசி கெட்டுப் போய் வாய்க்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காது.இந்த தனியா துவையல் அரைத்து ரசம் சோற்றுடன் கொடுத்தால் வாய்க்கு உணக்கையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.செய்வதும் எளிது.ருசியானதும் கூட.
தேவையான பொருட்கள்:
தனியா/கொத்துமல்லி விதை: ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் : 3 கீற்று
புளி : நெல்லிக்காய் அளவு
உரித்த பூண்டு : 10 பல்
காய்ந்த மிளகாய் : 6
நல்லெண்ணெய் : 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை :
1.தேஙகாயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி தனியாவை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
3.பிறகு உப்பு தவிர மற்ற பொருட்கள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
4.தட்டில் கொட்டி ஆறவிடவும்.
4.சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து மையாக அரைத்தெடுக்கவும்.
சுவையான தனியா துவையல் ரெடி.