பருப்பு கொத்துமல்லி சட்னி

IMG_20190213_125552688.jpg
எளிதான ரெசிப்பியாயிற்றே..
இதையேன் பதிவேற்றுகிறேன்?.
என் மகன்களைப் போன்று சமையல் கலையில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்காக எளிய சட்னி,துவையல் வகைகளை பதிவேற்ற உத்தேசம்.✌
மிகவும் நலம் பயக்கும் ஆதலால் கொத்துமல்லியை முடிந்த வரை தினமுமே உணவில் சேர்த்தல் அவசியம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் – 2 கீற்று
உளுந்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அல்லது கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் – 6
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்துமல்லி – ஒரு கட்டு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு

செய்முறை :

1.கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பை சிவக்க வறுக்கவும்.
சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் மற்றும் மிளகாயை போட்டு வதக்கவும்.
புளியை சிறுதுண்டுகளாகப் பிய்த்துப் போட்டு வதக்கி தட்டில் கொட்டி ஆறவிடவும்.
2.கொத்தமல்லியை வேர்ப்பகுதியை நறுக்கி மண்போக அலசவும்.கனமான தண்டுப்பகுதியை மட்டும் நீக்கவும்.
3.பருப்பு வதக்கிய கடாயை சூடாக்கி கொத்துமல்லியை அதில் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.அதிகம் வதக்கி விடக் கூடாது.
IMG_20190213_124351648.jpg
4.மிக்ஸியில் கொத்துமல்லி நீங்கலாக மற்ற பொருட்களைப் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.நன்கு மசிந்ததும் வதக்கிய கொத்துமல்லியைப் போட்டு அரைக்கவும்.சுவையான சட்னி ரெடி.
IMG_20190213_125552688.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s