நெடுங்காலமாக கிராமங்களில் பரவலாக செய்யப்பட்டு வரும் ஒரு பிரபல பலகாரம் இது. எள்,வெல்லம்,வேர்க்கடலை, கேழ்வரகு என எல்லாமே ஆரோக்கியத்துக்கு உகந்த பொருட்களால் செய்யப்படுவது. மிகவும் சத்தும் சுவையுமுள்ளது. இரும்புச் சத்து மிகுந்த இந்த உருண்டையை அடிக்கடி செய்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.செய்வதும் எளிது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 250 g
வெல்லம் – 150 g
வெள்ளை எள் – 50g
வேர்க்கடலை – 50g
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
நல்லெண்ணெய்/நெய் -50g
செய்முறை :
1.கேழ்வரகு மாவில் சிட்டிகை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி தளர பிசைந்து வைக்கவும்.
2.வெல்லத்தை உடைத்துக் கொள்ளவும்.
3.எள்ளையும் வேர்க்கடலையையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
4.வறுத்த எள்ளையும்,கடலையையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்துக் கொள்ளவும்.பவுடராக அரைக்கக் கூடாது.
5.தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய்/நெய் ஊற்றி, பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறிது எடுத்து அடை போல தட்டவும்.சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
6.அடைகளை தட்டில் போட்டு ஆறிய பிறகு சின்ன சின்னத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
7.மிக்ஸி ஜாரில் உடைத்த கேழ்வரகு துண்டுகள்,உடைத்த வெல்லம் போட்டு ரெண்டு சுற்றி சுற்றி எடுக்கவும்.
8.அரைத்த எள் வேர்க்கடலை + ஏலக்காய்த்தூளை இதனுடனுன் நன்கு கலக்கவும்.சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மூடிபோட்ட டப்பாவில் எடுத்து வைக்கவும்.
ஒரு வாரமானாலும் கெடாது.