குழம்புத் தூள்

IMG_20190131_070247668.jpg
இது ஒரு ஆல்பர்ப்பஸ் குழம்புத்தூளுக்கான ரெசிப்பி. புளிக்குழம்பு, மீன்குழம்பு,கறிக்குழம்பு,
வத்தக்குழம்பு,சாம்பார், க்ரேவி, காய் வதக்கல்,வறுவல் என எல்லாவற்றிற்கும் உபயோகப் படுத்தலாம்.
அரைகிலோ மிளகாய் அளவுக்கு அளவுகள் சொல்லியிருக்கிறேன்.சற்று உறைப்பாகவே இருக்கும்.காரம் குறைவாக வேண்டுவோர் கொத்துமல்லி விதை அளவை(1/4 கி) சற்றே அதிகப் படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் :

குண்டுமிளகாய் : 1/2 கிலோ
கொத்துமல்லி விதை : 1/2 கிலோ
மிளகு : 50 g
சீரகம் : 50g
வெந்தயம் : 50g
கடுகு : 50g
முழு மஞ்சள் : 50 g
துவரம்பருப்பு : 50g
புழுங்கலரிசி : 50g
உலர்ந்த கறிவேப்பிலை : முக்கால் ஆழாக்கு
IMG_20190130_170855633.jpg
IMG_20190130_171715950.jpg

செய்முறை :
1.மிளகாய் ,கொத்துமல்லி விதை யை வெயிலில் நன்கு காயவைத்துக் கொள்ளவும்.
2.மிளகு,சீரகம்,வெந்தயம்,கடுகு, ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
3.துவரம்பருப்பு,அரிசியை சிவக்க வறுத்து எடுக்கவும்.உலர் கறிவேப்பிலையை லேசாக சூடான வாணலியில் போட்டு எடுக்கவும்.
4.எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரவை மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
5.அரைத்த மிளகாய்த் தூளை சூட்டுடன் டப்பாவில் அடைக்கக் கூடாது.பேப்பரில் போட்டு ஆறவிட்டு ஆறியவுடன் மூடி இறுக்கமான டப்பாவில் போட்டு வைக்கவும்.ஆறு மாதமானாலும் கெடாது.
IMG_20190130_205227965.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s