மட்டன் புளிக்குழம்பு

IMG_20190127_143519325.jpg
மட்டன் புளிக்குழம்பு எங்கள் குடும்பங்களில் பிரபலமாக செய்யப்படும் ஒரு குழம்பு வகையாகும்.
குருமா,க்ரேவி, போன்றவை அலுத்துப் போகும் நேரங்களில் இதை செய்வதுண்டு.
கறிச்சாறு இறங்கிய குழம்பில் சேர்க்கப்பட்டு ஊறிய காய்கறிகள் உண்பதற்கு அத்தனை சுவையாக இருக்கும்.

தேவையான பொருள்கள் :

மட்டன் : அரை கிலோ
கருணைக்கிழங்கு – 200g
முருங்கைக்காய் – 2
கத்தரிக்காய் – 200 g
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
பச்சைமிளகாய் -2
தேங்காய் கீற்று -3
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தனி மிளகாய்த்தூள் – 1 tsp
குழம்பு மிளகாய்த்தூள் – 6 tsp
நல்லெண்ணெய் -50g
சோம்புத்தூள் – 1/2 tsp
கடுகு,வெந்தயம்,சீரகம் -சிறிதளவு (தாளிக்க)
கறிவேப்பிலை
உப்பு.

செய்முறை :

1.கறியை உப்பு,மஞ்சள்தூள் போட்டு கழுவி குக்கரில் போட்டு ஒரு tsp மிளகாய்த்தூள்,ஒரு tsp குழம்புத்தூள், உப்பு சேர்த்து பதமாக வேகவைத்துக் கொள்ளவும்.
IMG_20190127_125134039.jpg
img_20190127_134608672
2.புளியை ஊறவைக்கவும்.
IMG_20190127_130300522.jpg
3.காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.
IMG-20190128-WA0024.jpg

4.குழம்பு சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்த பின் சீரகம்,வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கியவுடன் காய்கறிகளைச் சேர்க்கவும்.சிறிது நேரம் வதக்கவும்.
img_20190127_134556083

6.மீதமுள்ள குழம்புத்தூள்,உப்பு சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.மூடி போட்டு வேகவிடவும்.
IMG_20190127_134956029.jpg
7.தேங்காயை மையாக அரைத்து எடுக்கவும்.
IMG_20190127_141123569.jpg
8.காய்கறிகள் பதமாக வெந்தவுடன் வேகவைத்த கறியை குழம்பில் போடவும்.3 நிமிடம் கொதிக்கவிட்டு புளியைக் கரைத்து ஊற்றவும்.2 நிமிடம் கொதிக்கவிடவும்.
img_20190127_141146438_burst000_cover_top

9.அரைத்த தேங்காயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
IMG_20190127_141827758.jpg

10.சோம்புத்தூளை சேர்க்கவும்.ஒரு கொதி கொதிக்கவிட்டு உப்பு ருசி பார்த்து இறக்கிவிடவும்.
சோறு,இட்லி,தோசை,சப்பாத்தியுடன் சரியான துணை சேரும்.
img_20190127_143519325

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s