பொரியரிசி உருண்டை

img_20190122_201207232
நாகை மாவட்டத்து வேளாங்கண்ணி நகரில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் ஒரு இனிப்பு வகை இது.
வறுத்த புழுங்கலரிசியில் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் இந்த பொரியரிசி உருண்டை மிகவும் சுவையானது.சத்துள்ளது.செய்வதற்கும் மிகவும் எளிது.மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருள்கள் :

புழுங்கல் அரிசி : 200 g
வெல்லம் : 350 g
தேங்காய் : அரை மூடி
ஏலக்காய்த்தூள் : சிறிதளவு
நெய் : 25 g

செய்முறை :
IMG_20190122_192056173.jpg
1.தேங்காயை துருவலாகத் துருவி வைக்கவும்.அரிசியை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.
IMG_20190122_192938558.jpg
2.மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.வெல்லத்தை இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.
IMG_20190122_193118712.jpg
3.கடாயை அடுப்பில் வைத்து வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.IMG_20190122_193545102.jpg
4.அரைத்துவைத்த அரிசிமாவு, ஏலத்தூளை வெல்லக்கரைசலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.IMG_20190122_194428083.jpg
5.நன்கு கிளறி கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் தட்டில் கொட்டி ஆறவிடவும்.
IMG_20190122_194629857.jpg
6.மாவுக்கலவை ஆறியவுடன் கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டையாகப் பிடிக்கவும். தேங்காய்த் துருவலில் போட்டு பிரட்டி எடுத்து தட்டில் அடுக்கவும்.
சுவையான பொரியரிசி உருண்டை தயார்.
IMG_20190122_201207232.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s