ஈஸி சாக்லேட் கேக்

img_20190107_122203528
கேக் செய்வதென்றாலே நேரமெடுக்கும் வேலை தான்.அதிக சிரமமில்லாமல், அதிக மெனக்கெடல் இல்லாமல் ஈஸியாக சில நிமிடங்களிலேயே மாவு தயார் செய்து சுவையான கேக் பேக் செய்துவிட முடியுமென்றால்?..அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் கேக்..

தேவையான பொருட்கள் :

மைதாமாவு : 400g
சர்க்கரை : 400g
கோகோ பவுடர் : 150g
முட்டை : 4
பால் : 200 மிலி
வெண்ணெய் : 200g
வனிலா எசன்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் :1 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா : 1/2 டீஸ்பூன்
உப்பு : இரண்டு சிட்டிகை

செய்முறை :

1.வெண்ணையை உருக்கி ஆறவைக்கவும்.பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.சர்க்கரையை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.நான்கு முட்டையை உடைத்துவைக்கவும்.
img_20190107_111051087
2.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, அரைத்த சர்க்கரை,கோகோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப் போடவும்.கையால் நன்றாக கிளறிக் கொடுத்து கலந்துவிடவும்.
img_20190107_111818739
3.முட்டையை அதில் சேர்க்கவும்.
img_20190107_112023963
4.உருக்கிய வெண்ணெய்,பால்,வனிலா எசன்ஸ் சேர்த்து மிதமான ஸ்பீடில் பீட்டரால் அடித்துக் கலக்கவும்.
img_20190107_112052262
img_20190107_112404224
5.அவனை ப்ரிஹீட் செய்யவும்.கேக் டின்னில் வெண்ணெய் தடவி மைதா மாவு சிறிது தூவி டஸ்டிங் செய்யவும்.
img_20190107_112835662
6.அடித்த கேக் கலவையில் மிதமான சூட்டில் 100 மிலி சுடுதண்ணீர் சேர்க்கவும்
img_20190107_112655024
IMG_20190107_112711218.jpg
7. பீட்டரால் மிதமான ஸ்பீடில் அடித்து நன்றாக கலக்கவும்.
IMG_20190107_112822614.jpg
8.கேக்டின்னில் பாதி பகுதி வரை ஊற்றவும்.கேக் கலவை நீர்த்த மாதிரி இருக்கும்.கவலை வேண்டாம்.
img_20190107_112919946
9.அவனில் 250° சூட்டில் 30 நிமிடத்திற்கு வைக்கவும்.
img_20190107_113003322
10.30 நிமிடம் கழித்து வெளியே எடுத்து மெல்லிய கத்தியை கேக்கின் நடுப்பகுதியில் சொருகிப் பார்க்கவும்.கத்தி கிளீனாக வெளியே வந்தால் கேக் முழுவதும் வெந்துவிட்டது என அறிக.img_20190107_120910247
img_20190107_121102514
சுவையான சாக்லேட் கேக் ரெடி.ஆறவிட்டு துண்டு போடலாம்..
IMG_20190107_125805091.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s