பச்சைப் பட்டாணி சீஸன் ஆரம்பித்த உடன் கண்டிப்பாக எங்கள் வீட்டில் செய்யப்படும் ஒரு சுவையான ரெசிப்பி இது.சோறுடன் செட்டாவதில்லை. இட்லி,தோசை,சப்பாத்தி, இடியாப்பத்துடன் நன்கு துணை சேரும்.
வறுத்த தனியாவின் மணம் எனக்கு பிடித்தமென்பதால் வறுத்தரைத்து சேர்த்துள்ளேன்.வறுக்காமலும் அரைத்து சேர்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
உருளைக்கிழங்கு – 1/2கிலோ
பச்சைபட்டாணி உரித்தது -200g
தேங்காய் – அரைமூடி
பச்சைமிளகாய் -10
தக்காளி -3
சின்ன வெங்காயம் – 20
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி சிறிதளவு
தனியா -3 tsp
கசககா – 1/2 tsp
சோம்பு – 1/2 tsp
நல்லெண்ணெய் -50g
செய்முறை :
1.உருளைக்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு வேகவைத்து உரித்து துண்டுகளாக வெட்டிவைக்கவும்.சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
2.தனியா,கசகசா,சோம்பை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
3.தேங்காய்,பச்சைமிளகாயை மையாக அரைத்துக் கொள்ளவும்.
4.அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை வெட்டி போட்டு வதக்கவும்.வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட்,தக்காளி,கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
5.நன்கு வதங்கி வந்ததும் அரைத்துவைத்த தனியாத்தூள் போட்டு வதக்கி பச்சைப் பட்டாணி உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
6.அரைகிளாஸ் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.பட்டாணி வெந்ததும் வெட்டிவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் நன்கு கிளறவும்.
7.அரைத்து வைத்த தேங்காயை சேர்க்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். தளதளவென்று கொதித்து வரும் போது உப்பு சரிபார்த்து இறக்கிவிடவும்.
பின்குறிப்பு:
*தேங்காயை பாலெடுத்தும் சேர்க்கலாம்
*பச்சைமிளகாயை தனியே அரைத்து சேர்க்கலாம்
*தனியாவை பச்சையாக வறுக்காமலும் அரைத்துச் சேர்க்கலம்.