காய்கறி அவியல்

IMG_20181213_130428841.jpg
நேயர் விருப்பத்தினால் இன்று இந்த ரெசிப்பி பதிவிடுகிறேன்.செய்வதற்கு மிகவும் எளிதான அதே நேரம் சுவையான ரெசிப்பி இது.விருப்பமான காய்கறிகளை சேர்த்து செய்யலாம்.சோறு,காரடை முதலியவற்றிற்கு சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 1
வாழைக்காய் -1
கருணைக்கிழங்கு – 200 g
கேரட் – 2
தேங்காய் – 3 கீற்று
பச்சைமிளகாய் – 4
சீரகம் – 1/2tsp
தயிர் -150g
சின்ன வெங்காயம் – 5(Optional)
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
கடுகு – சிறிதளவு
உளுந்து – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை -சிறிதளவு
கடலையெண்ணெய் – 1tsp
தேங்காய் எண்ணெய் – 1tsp

செய்முறை :

1.காய்கறிகளை கழுவி சற்றே கனமான நீளத்துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
IMG_20181213_121926513

2.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி ஒரு tsp எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அரிந்த காய்கறிகளை அதில் போட்டு உப்பு மஞ்சள்தூள் போட்டு ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேகவைக்கவும்.
IMG_20181213_122707079

3.தேங்காய் பச்சைமிளகாய் சீரகத்தை சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
IMG_20181213_125309453.jpg

4.காய்கறிகள் வெந்து தண்ணீர் முற்றிலும் சுண்டிய பிறகு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.பிறகு தயிர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.ஒரு கொதி போல வந்ததும்
இறக்கி விடவும்.

5.சிறு கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அவியலில் சேர்க்கவும்.சுவையான அவியல் ரெடி.
IMG_20181213_130436079.jpg

*காய்கறிகள் குழைந்து விடக்கூடாது
*தயிர் சேர்த்தபின் அதிகநேரம் கொதிக்க விடக்கூடாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s