ஈஸி இறால் பிரியாணி

IMG_20181212_142822654
இறால் பிரியாணி ரெசிப்பி பலரும் கேட்பதால் எளிதான முறை இங்கு அப்லோடியுள்ளேன்.ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் இல்லை.பின்னொரு முறை பிரியாணி செய்யும் போது படங்கள் இணைக்கிறேன்.இறால் ஃப்ரெஷ்ஷாக பார்த்து வாங்கவேண்டும்.இறால் ஓரளவு பெரிய சைஸில் இருப்பது நல்லது.

தேவையான பொருள்கள் :

இறால் – 1/2 கிலோ
சீரகசம்பா அரிசி – 400g
வெங்காயம் – 4
தக்காளி – 4
பச்சைமிளகாய் – 6
புதினா – அரை கட்டு
கொத்துமல்லி -அரை கட்டு
தயிர் – 100g
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 3tsp
நெய் – 2tsp
நல்லெண்ணெய்/கடலையெண்ணெய்-150g
மிளகாய்த்தூள் – 1 tsp
கரம் மசாலாத்தூள் – 1/2 tsp
எலுமிச்சம் பழம் – 1
பட்டை – 1 துண்டு
லவங்கம் – 4
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இலை – 2

செய்முறை:

1.இறாலை சுத்தம் செய்து உப்பு,வினிகர்,மஞ்சள் தூள் போட்டு உரசி நன்கு கழுவவும்.கழுவிய இறாலில் ஒரு tsp மிளகாய்த்தூள்,துளி மஞ்சள்தூள்,சிறிது உப்பு போட்டு பிசறவும்.பத்து நிமிடம் ஊறவிடவும்.

2.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கவும்.தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.புதினா,கொத்துமல்லியை ஆய்ந்து கழுவி வைக்கவும்.

3.அடுப்பில் கடாய் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசறிவைத்த இறாலை அதில் போடவும்.தண்ணீர் எதுவும் விட வேண்டாம்.இறால் வேகும் போது தண்ணீர் விடும்.தண்ணீர் சுண்டி வரும் போது இறக்கிவிடவும்.

4.அரிசியை கழுவி தண்ணீர் முற்றிலும் இல்லாமல் வடித்து ஒரு புறம் வைக்கவும்

5.அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை
வைத்து நெய் + எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலையை போடவும். வெட்டிவைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட்டைப் போடவும்.

6.2 நிமிடம் போல வதக்கி தக்காளி பச்சைமிளகாய்,புதினா,கொத்துமல்லி போட்டு 5 நிமிடம் வதக்கவும்.நன்கு வதங்கி வந்ததும் தயிர், மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து
வதக்கவும்.

7.வேகவைத்த இறாலை போடவும்.சிறிது வதக்கிவிட்டு 3 1/2 க்ளாஸ்(200மிலி×3.5) தண்ணீர் ஊற்றவும்.நன்கு கொதித்து வந்தவுடன் கழுவி வைத்த அரிசியைப் போட்டு வேகவிடவும்.உப்பு ருசி பார்த்து தேவையான உப்பு சேர்க்கவும்.

8.நன்கு வெந்து தளவென்று பொங்கல் பதத்துக்கு வரும்போது அரைமூடி எலுமிச்சை பிழியவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

9.சுத்தமான காட்டன் துணி கொண்டு பிரியாணி பாத்திரத்தின் வாயை மூடி கட்டவும்.அதன் மேல் பெரிய தட்டு போட்டு மூடவும்.
இன்னொரு மீடியம் சைஸ் பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் பிடித்து அதன் மீது வைக்கவும்.அடுப்பு சிம்மிலேயே 7 நிமிடம் இருக்கட்டும்.

10.ஏழு நிமிடம் கழித்துத் திறந்தால் பிரியாணி பொலபொலவென்று இருக்கும்.வேறு பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும்.தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

IMG_20181212_142822654

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s