கார்ன்ஃப்ளேக்ஸ் சிக்கன்.

IMG_20181209_123851674
இதற்கு இந்த பெயர் வைத்தது 10 மற்றும் 6 வயதுள்ள தம்பி மகள்கள்.
KFC சிக்கன் பிரியைகளான அவர்கள் வரும்போதெல்லாம் இந்த ரெசிப்பி செய்வது வழக்கமாகிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

போன்லெஸ் சிக்கன் – அரை கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
லெமன் – ஒன்று
புதினா – கைப்பிடி அளவு
பச்சைமிளகாய் – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
முட்டை -2
மைதாமாவு – 100g
சாதாரண கார்ன்ஃப்ளேக்ஸ் – 200g
சோம்புத்தூள் – சிறிதளவு

செய்முறை :

1.சிக்கனை உப்பு மஞ்சள்தூள் போட்டு நன்கு உரசி கழுவிவைக்கவும்.

2.புதினாவை பச்சைமிளகாயுடன் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

3.முட்டையை துளி உப்பு மஞ்சள்தூள் சோம்பு போட்டு அடித்து வைக்கவும்.
IMG_20181209_122618199.jpg

4.கார்ன்ஃப்ளேக்ஸை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
IMG_20181209_122531853

5.மைதாவை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
IMG_20181209_122524106.jpg

4.வாயகன்ற பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சிபூண்டு பேஸ்ட்,புதினா அரைத்தது,மஞ்சள்தூள்,போட்டு பிசறவும்.எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும்.கைகளால் நன்கு பிசறி விடவும்.IMG_20181209_122738375.jpg

5.மூடி ஒரு பக்கமாக அரைமணி நேரமாவது வைத்துவிடவும்.முடிந்தால் ஒருமணி நேரம் வரை ஊறவைக்கலாம்.

6.கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஒரு சிக்கன் துண்டாக எடுத்து மைதாவில் பிரட்டி முட்டைக் கரைசலில் நனைத்து அரைத்த கார்ன்ஃப்ளேக்ஸில் பிரட்டி எண்ணெயில் போட்டு நிதானமான தீயில் பொரித்து எடுக்கவும்.
எல்லா பக்கமும் சிவந்து வந்தவுடன் தக்காளி சாஸுடன் பரிமாறவும்

IMG_20181209_123851674.jpg

2 thoughts on “கார்ன்ஃப்ளேக்ஸ் சிக்கன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s