சிறுபருப்பு குருமா

IMG_20181208_144347499.jpg
இதுவும் அம்மாச்சியின் ரெசிப்பிதான்.
சாப்பிடுவதற்கு கும்பல் அதிகமாக இருக்கும் நேரங்களில் இட்லிக்குத் தொட்டுக் கொள்ள இந்த குருமாவை செய்துவிடுவார்கள்.பருப்பு சேர்த்து செய்வதால் பாத்திரம் நிறைந்து காணும்.எளிதான சுவையான ரெசிப்பி இது.

தேவையான பொருள்கள் :

சிறுபருப்பு – 100g
மஞ்சள்தூள் – சிறிது
மிளகாய்த்தூள் – அரை tsp
கசகசா – அரை tsp
தேங்காய் – 3 கீற்று
பொட்டுக்கடலை -1 tsp
வெங்காயம் -2
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 4
கொத்துமல்லி -சிறிதளவு
நல்லெண்ணெய் – 50g
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1.சிறுபருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்
IMG_20181208_130542835.jpg
2.அடிகனமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் சேர்த்து திறந்தவாறு வேகவைக்கவும்.மலர வெந்து வந்தவுடன் இறக்கிவைக்கவும்.
IMG_20181208_142017000

3.வெங்காயம்,தக்காளி,கொத்துமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
4.தேங்காய்,கசகசா,பொட்டுக்கடலைய
பச்சைமிளகாயை சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
IMG_20181208_141524063.jpg
5.கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் போடவும். வதங்கியபின் இஞ்சிபூண்டு பேஸ்ட்டை போடவும்.சிறிது வதக்கிவிட்டு தக்காளி, கொத்துமல்லியை சேர்க்கவும்.
IMG_20181208_142120135.jpg
6.தக்காளி வதங்கிவந்தவுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

7.வெந்த பருப்பை மசித்து அதில் சேர்க்கவும்.உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்த தேங்காயை அதில் சேர்த்து 5 நிமிடம் போல கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.
IMG_20181208_143036762_BURST001.jpg
சுவையான சிறுபருப்பு குருமா ரெடி.
சோறு,இட்லி,சப்பாத்தி,தோசை,இடியாப்பத்துடன் பரிமாறலாம்.
*விரும்பினால் அடுப்பிலிருந்து இறக்கும்போதுஅரை எலுமிச்சம் பழம் பிழியலாம்.

IMG_20181208_144425925.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s