ஆலு மசாலா தால்/உருளைக்கிழங்கு மசாலா பருப்பு

IMG_20181205_134625779
பீஹாரிகள் அடிக்கடி செய்யும் ரெசிப்பி இது..யாரிடம் எந்த ரெசிப்பி கேட்டறிந்தாலும் அதை அப்படியே செய்யாமல் அதில் என் விருப்பப்படி சில ட்விஸ்ட்டுகளைச் சேர்ப்பது வழக்கம்.இதிலும் அப்படியே.
சோறு, சப்பாத்தி,தோசை என எதற்கும் செட்டாகும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 150g
உருளைக் கிழங்கு – 2
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் -3
அப்பளம் – 6
மிளகாய்த்தூள் – 1/2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்துமல்லி -1கட்டு
பட்டை – 1 துண்டு
க்ராம்பு – 4
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலை – 2
சோம்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1.கடலைப்பருப்பு மஞ்சள்தூள் பட்டை பிரிஞ்சி இலை குக்கரில் போட்டு குழையாமல் வேகவைத்து எடுக்கவும்
IMG_20181205_130951009

2.உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
IMG_20181205_130942622
3.வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
4.கடாயில் 3 tsp எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும்.வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வதங்கியபின் இஞ்சிபூண்டு பேஸ்ட்டை சேர்க்கவும்.
5.வதங்கியபின் தக்காளி,கீறிய பச்சை மிளகாய்,நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
6.தக்காளி மசிந்து வந்தவுடன் உருளைக்கிழங்கை சேர்க்கவும்.5நிமிடம் நன்கு வதக்கிவிட்டு மிளகாய்த்தூளைச் சேர்க்கவும்.ஒரு க்ளாஸ் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேகவிடவும்.
IMG_20181205_132024745.jpg
7.கிழங்கு வெந்தவுடன் வெந்த பருப்பை ஒன்றும் பாதியுமாக மசித்து சேர்க்கவும்.நன்றாக 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8.இறக்கிவைத்து பொரித்த அப்பளத்தை ஒன்றும் பாதியுமாக நொறுக்கிப் போட்டு கலந்துவிடவும்.
ஆலு மசாலா தால் ரெடி.
IMG_20181205_134625779.jpg

குறிப்பு :விருப்பமென்றால் தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி நெய்யில்/எண்ணெயில் சிவக்க வறுத்து மேலாகப் போடலாம்.சுவை கூடும்.

**நேரம் மிச்சப்படுத்த வேண்டுமெனில் கடலைப்பருப்போடு உருளைக்கிழங்கை சேர்த்து வேகவைத்து சேர்க்கலாம்.

2 thoughts on “ஆலு மசாலா தால்/உருளைக்கிழங்கு மசாலா பருப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s