நெத்திலி கருவாட்டுக் குழம்பு (சென்னை ஸ்டைல்)

IMG_20181204_130055930
தாய்வழிப் பாட்டியின் அதென்டிக் ரெசிப்பி இது..காய்கறிகள்,கருப்பு கடலை எல்லாம் போட்டு அவர்கள் வைக்கும் கருவாட்டுக் குழம்பு அவ்வளவு அருமையாக இருக்கும்.கீற்றாக கீறிப் போடப்பட்ட தேங்காய் குழம்பில் ஊறி வெகு சுவையாக இருக்கும். செய்முறையும் எளிது.

தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு – 100g
புளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 6 tsp
கருப்பு கடலை – 100g
முருங்கைக்காய் – 1
கத்தரிக்காய் – 2
வாழைக்காய் – 1
கருணைக் கிழங்கு – 200g
தேங்காய் – 2 கீற்று
சின்னவெங்காயம் – 10
பூண்டு – 10
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் – 50g
தாளிப்பு வடகம் சிறிதளவு (அல்லது)
கடுகு,சீரகம்,வெந்தயம் – சிறிதளவு

செய்முறை :
IMG_20181204_105037897.jpg

1.நெத்திலியை ஊறவைத்து உப்பு போட்டு பிசறி நன்றாக கழுவவும்.சிறிது மஞ்சள்தூள் போட்டு பிசறி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து கழுவிவிடவும்.
2.கருப்பு கடலையை குழம்பு வைப்பதற்கு 4 மணிநேரம் முன்பே ஊறவைத்து விடவும்.இல்லையென்றால் வெறும் கடாயில் போட்டு நன்கு சிவக்க வறுத்து பின்னர் குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும்.
IMG_20181204_113620708

3.காய்கறிகளை வெட்டிக் கொள்ளவும்.வெங்காயம் பூண்டை உரித்துக் கொள்ளவும்.
IMG_20181204_120814749.jpg
4.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்பு வடகம் சிறிதளவு போடவும்.
வடகம் இல்லையென்றால் கடுகு,சீரகம்,வெந்தயம் போட்டு தாளிக்கவும்
5.நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.வதங்கியபின் தக்காளியை நறுக்கிச் சேர்க்கவும்.
6.வெட்டிவைத்த காய்கறிகளை அதில் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.2 கீறின பச்சைமிளகாய் மற்றும் குழம்புத்தூளை சேர்த்து வதக்கவும்.உப்பு மற்றும் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..
7.கழுவிய கருவாட்டை மற்றும் வேகவைத்த கருப்பு கடலையை குழம்பில் சேர்க்கவும்.தேங்காயை மெல்லிய வில்லைகளாக கீறிச் சேர்க்கவும்
8.காய்கறிகள் வெந்துவந்தபின் புளியைக் கரைத்துச் சேர்க்கவும்.5நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
மேலாக ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி இறக்கி வைக்கவும்.
சப்பாத்தி,இட்லி,தோசை முதலியவற்றுடனும் சாப்பிடலாம்.
சுடுசோற்றில் பிசைந்து உளுந்து அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் டிவைனு.😁
IMG_20181204_125929267

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s