பனீர் குடைமிளகாய் காரக்கறி

IMG_20181203_132407038.jpg
ஈஸியான அதேநேரம் சுவையான பனீர் ரெசிப்பி இது..ரெடிமேட் மசாலா ஏதும் போடாமல் வீட்டு அஞ்சறைப்பெட்டியில் அகப்படும் மசாலாக்களைக் கொண்டே எளிதாக செய்து விடலாம்.பனீர் மட்டும் வாங்கும்போது புதிதாக பார்த்து வாங்கவேண்டும்.ப்ரெஷ்ஷாக மசாலா அரைத்துச் சேர்ப்பதால் அலாதி மணம்,சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருள்கள் :

பனீர் – 200g
குடைமிளகாய் – 250g
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய்த்தூள்- 1/4tsp
எண்ணெய் – 50g
கொத்துமல்லித்தழை – சிறிது
உப்பு

அரைத்துக் கொள்ள வேண்டியவை :

தனியா – 2 tsp
கசகசா – 1/2tsp
சோம்பு – 1/4 tsp
சீரகம் – 1/4 tsp
காய்ந்த மிளகாய் – 4
பட்டை – சிறுதுண்டு
க்ராம்பு – 3
ஏலக்காய் -2

செய்முறை :
1.பனீரை கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.துளி மிளகாய்த்தூள் உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
2.குடைமிளகாயை காம்பு விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3.அரைக்கச் சொல்லியிருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஆறவைத்து பொடியாக அரைக்கவும்.
IMG_20181203_130307175
4.தோசைக்கல்லில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பனீர் துண்டுகளை போட்டு லேசாக சிவக்க விட்டு திருப்பிப் போடவும்.மறுபுறமும் சிவக்கவிட்டு இறக்கிவைக்கவும்.ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் இந்த பன்னீர் துண்டுகளை போடவும்.(கடினமாகாமல் இருப்பதற்காக)
IMG_20181203_123246710
5.கடாயில் இரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிப் போடவும்.வதங்கியபின் இஞ்சியை துருவி சேர்க்கவும்.வெட்டிய தக்காளியை போட்டு 2 பச்சைமிளகாயை கீறி சேர்க்கவும்..
6..வதங்கியபின்பு குடைமிளகாயை போடவும்.2நிமிடம் வதக்கிவிட்டு அரைத்துவைத்த பொடியைப் போட்டு கிளறவும்.மஞ்சள் தூளைச் சேர்க்கவும்
IMG_20181203_130506221
7.அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பனீர் துண்டுகளைச் சேர்க்கவும்.2 நிமிடம் கொதிக்கவிட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
IMG_20181203_130751569.jpg
8.தண்ணீர் முற்றிலும் சுண்டி சுருண்டு வரும் வரை வதக்கி இறக்கவும்..
சோறு,சப்பாத்தி முதலியவற்றுக்கு வகையான சைட்டிஷ்ஷாக இருக்கும்.

IMG_20181203_132359200.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s