யாரும் எளிதாக செய்துவிடக்கூடிய ஒரு ரெசிப்பி இது..குறிப்பாக குளிர்காலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்..காரத்துக்கு மிளகு மட்டுமே சேர்ப்பதால் மிகவும் ஆரோக்யமானதும் கூட.
தேவையான பொருட்கள் :
கோழிக்கறி – 1/2 கிலோ
மிளகுத்தூள் – 1/2 tsp
பட்டை – சிறிய துண்டு
க்ராம்பு – 3
ஏலக்காய் – 2
சின்ன வெங்காயம் – 15
பெரிய தக்காளி – 2
நல்லெண்ணெய் – 100மிலி
மிளகு – 2 tsp
சீரகம் – 2 tsp
சோம்பு – சிறிதளவு
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் சிறிது
சர்க்கரை – 2 சிட்டிகை
கொத்துமல்லித் தழை
கறிவேப்பிலை
செய்முறை :
1.சிக்கனை சுத்தமாக கழுவி துளி உப்பு + மஞ்சள் + மிளகுத்தூள் போட்டு பிசறி வைக்கவும்.
2.மிளகு சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து வைக்கவும்.
3.பட்டை +க்ராம்பு + ஏலக்காய் + வறுத்த மிளகு சீரகம் முதலியவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து வைக்கவும்.
4.பெரிய வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து எடுக்கவும்.(கொரகொரப்பாக)
5.தக்காளியை மிகவும் சிறியதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.இஞ்சி பூண்டை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
6.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்..வதங்கியபின் தக்காளி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
7.அரைத்துவைத்த மிளகு சீரகப் பொடியை போட்டு வதக்கி சிக்கன் துண்டுகளை போடவும்.5 நிமிடம் நன்கு வதக்கவும்.
8.நறுக்கிய கொத்துமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.சற்று நேரம் வதங்கியபின் இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும்..மூடிவைத்து வேகவிடவும்.சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும்.
9.சிக்கன் நன்கு வெந்த பிறகு பதம் பார்த்து இறக்கிவிடவும். கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.
சுவையான மிளகுச்சாறு ரெடி..சோறு சப்பாத்தி தோசையுடன் அருமையாக இருக்கும்.