ஃப்ரைட் மட்டன் சாப்ஸ்:
இந்த டிஷ்ஷ எங்க வீட்ல நாங்க மட்டன் கவாப் ன்னு சொல்லுவோம்.
செய்வதும் எளிது,சுவையாகவும் இருக்கும்.
மட்டன் சாப்ஸ் கறிதான் இதற்கு ஏற்றது.
விருப்பமிருந்தால் சாதாரண மட்டன் துண்டுகளிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் சாப்ஸ் கறி – அரை கிலோ
பட்டை – ஒரு துண்டு
க்ராம்பு -4
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
கொத்துமல்லி – 1 கட்டு
மிளகாய்த்தூள் – 2 tsp
மஞ்சள்தூள் – சிறிது
மிளகுத்தூள் – 1tsp
மைதா – 100g
கடலைமாவு – 100g
முட்டை -1
இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்தரைத்த விழுது – 2tsp
சோம்புத்தூள் – 1/2 tsp
சோடாமாவு – 2 சிட்டிகை
கொத்துமல்லித் தழை – சிறிது
செய்முறை :
1.கறியைக் கழுவி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து குக்கரில் பதமாக வேகவைக்கவும்
2.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை க்ராம்பு தாளித்து அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
3.இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதங்கியபின் தக்காளித்துண்டுகளை பின் கொத்துமல்லித்தழையை நறுக்கி சேர்க்கவும்
4.கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவைத்த கறியை சேர்த்து நன்கு கிளறவும்.நன்கு வதங்கி சுருண்டு வரும்போது மிளகுத்தூள் தூவி 1 நிமிடம் வதக்கி இறக்கவும்.
5.கடாயில் இருந்து கறித்துண்டங்களை பெரிய தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
6.ஒரு தட்டையான பாத்திரத்தில் ஒரு முட்டையை அடித்து சேர்த்து மைதாமாவு + கடலைமாவு+ துளி மஞ்சள் தூள் +கால் tsp மிளகாய்த்தூள் + சோம்புத் தூள் + உப்பு+சோடா மாவு சேர்த்து தோசைமாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
7.கடாயில் எண்ணெய் ஊற்றி ஆறவைத்த கறித்துண்டுகளை ஒட்டியிருக்கும் மசாலாவோடு சேர்த்து எடுத்து பொரித்து எடுக்கவும்..
அருமையான மட்டன் சாப்ஸ் ரெடி.
இது அதிகம் எண்ணெய் குடிக்காது.
பொரித்து எடுத்தபின் லேசாகவே இருக்கும்.