மீன் குழம்பு

மீன்குழம்பு என்னுடைய மிகுவிருப்ப உணவு..மக்களால் பரவலாக விரும்பப் படும் உணவும் கூட..சூடான பொன்னி அரிசி சோற்றிலே சுடச் சுட மீன்குழம்பு ஊற்றி பிசைந்து ஒரு கவளம் சாப்ட்டீங்கனா கண நேர மோட்சம் கண்ணில் ஆடிப் போகும்.

இங்கே கொடுத்திருக்கும் மீன் குழம்பு ரெசிப்பி பொதுவானது..குழம்புக்கு சாளை,மத்தி,கவளை,சங்கரா,பாறை,வெள்ளைக் கிழங்கான், சுதும்பு, நெத்திலி வகை மீன்கள் உசிதம்.

செய்முறை :

மீன்   –  1/2 கி

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 3

புளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு

பச்சைமிளகாய் – 3

குழம்பு வடகம் – சிறிதளவு

நல்லெண்ணெய் – 150 மிலி/100 மிலி

குழம்பு மிளகாய்த் தூள் – 5/6 tsp

தேங்காய் கீற்று – 2

சீரகம்  – சிறிதளவு

கறிவேப்பிலை

கடாயில் எண்ணெய் ஊற்றி வடகம் தாளித்து (இல்லையென்றால் கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கலாம்) அரிந்த வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி தக்காளித்துண்டுகள் மற்றும் இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கிவந்ததும் குழம்புத்தூள் சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றவும்..தேங்காயை அரைத்து அதில் ஒரு பச்சை மிளகாய் 3 சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சீரகம்துளி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

அரைத்த தேங்காய் விழுதை குழம்பில் சேர்க்கவும்..நன்கு கொதித்து வரும் போது கழுவிய மீன் துண்டுகளை அதில் சேர்க்கவும்..5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கும் போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் மேலாக சேர்க்லாம்..சுவையான மீன்குழம்பு ரெடி.
கிளிமூக்கு மாங்காய் கிடைக்கும்போது நான்கு அரிந்த துண்டுகள் குழம்பில் போடலாம்..சுவையும் மணமும் கூடும்.

பெருங்காய வாசனை பிடிப்பவர்கள் துளி பெருங்காயம் சேர்க்கலாம்.

துளி வெல்லம்/சர்க்கரை சேர்க்கலாம்.சுவை கூடும்.
IMG_20181129_144536596
கீழே இருக்கும் படத்தில் இருப்பது சின்ன மீன் பெயர் நாமப் பாறை..
பெரியமீன் பெயர் சங்கராமீன்
IMG_20181129_123821929.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s