மரவள்ளிக் கிழங்கு வதக்கல் கறி

புட்டு செய்து விட்டு மீதமான கிழங்கை தூக்கிப்போட மனமில்லாமல் ஒரு வதக்கல் கறி செய்தாச்சு..டேஸ்ட்டு நல்லாவேருந்தது..கிழங்கை முக்கால் பதம் இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுத்து செய்தால் எளிதாயிருக்கும்.

தேவையான பொருட்கள் :
மரவள்ளிக் கிழங்கு – 1/2 கிலோ
கடலை எண்ணெய் – 100 மிலி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி -2/3
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பற்கள்
கடுகு – சிறிதளவு
கொத்துமல்லித்தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1tsp
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
கிழங்கை தோலுரித்து முக்கால் பதம் ஆவியில் வேகவைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து துண்டுகளாக நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறி வதங்கி வருகையில் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

இஞ்சி பூண்டை இடித்துச் சேர்த்து வதக்கி கொத்துமல்லித் தழை, மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்..
நன்கு வதங்கி தொக்கு போல வரும்போது கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றவும்.நன்கு கொதி வந்து க்ரேவி போல வரும்போது மூடி போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
நடு நடுவே மூடியைத் திறந்து கிளறிவிடவும்.நன்கு சுருண்டு வரும் போது இறக்கி விடவும்.
IMG_20181129_163202750

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s