மரவள்ளிக் கிழங்கு – 1/2 கிலோ
தேங்காய் – ஒரு மூடி
உப்பு – சிறிது
சர்க்கரை -தேவையான அளவு
மரவள்ளிக்கிழங்கை மண் போக கழுவி தோல்சீவி தேங்காய் திருவியில் திருவிக் கொள்ள வேண்டும்.தேங்காயையும் அவ்விதமே திருவிக்கொள்ள வேண்டும்.கிழங்கில் துளி உப்பு தூவி பிசறி சற்றே கைகளினால் அழுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.புட்டுக்குழாயில் தேங்காய்த் துருவலை முதலில் போட்டு பிறகு துருவிய கிழங்கை பாதி நிரப்ப வேண்டும்.பின் சிறிது தேங்காய் துருவலை அதில் போட்டு துருவிய கிழங்கை போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.வெந்து வந்ததும் தட்டில் கொட்டி ஆறவிட்டு தேவையான சர்க்கரை,பொடித்த ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறலாம்.
You are always different from others.
LikeLiked by 1 person