ஸ்டஃப்டு மீட்டா பராட்டா (Stuffed Meeta Paratta)

பக்கத்துவீட்டில் வசிக்கும் பெங்காலி பாபி ஒரு நாள் இந்த டிஷ் செய்து தந்தார்கள்.அதன் சுவை மிகவும் பிடித்துப் போனதால் அவர்களிடம் ரெசிப்பி கேட்டு வாங்கி செய்து பார்த்தேன்.நன்றாகவே வந்தது.செய்வதற்கு ஈஸியானதும் கூட. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றிட இந்த ரெசிப்பியை பதிவேற்றுகிறேன். தேவையான பொருள்கள் : கோதுமை மாவு : 200g/ஒரு ஆழாக்கு வெள்ளை எள் : 2 டீஸ்பூன் வேர்க்கடலை : 100g வெல்லம் : 100g பேரீச்சம் பழம் : 5 மிளகு … Continue reading ஸ்டஃப்டு மீட்டா பராட்டா (Stuffed Meeta Paratta)

மேத்தி பூரி (வெந்தயக்கீரை பூரி)

வெந்தயக்கீரை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த கீரையாகும்.விட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்சியம்,மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.வெந்தயக்கீரைக்கு ஹிந்தியில் மேத்தி ஸாக் என்று பெயர். கீரை பிடிக்காதவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் சுவையான இந்த மேத்தி பூரியின் செய்முறை காண்போம். தேவையான பொருள்கள் : கோதுமை மாவு - 250 g வெந்தயக்கீரை - அரை கட்டு தயிர் - 100g மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 250 … Continue reading மேத்தி பூரி (வெந்தயக்கீரை பூரி)

தனியா/கொத்துமல்லி விதை துவையல்

ஜுரம் வந்து உடம்பு நன்றாகிய பின் நாக்கு ருசி கெட்டுப் போய் வாய்க்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காது.இந்த தனியா துவையல் அரைத்து ரசம் சோற்றுடன் கொடுத்தால் வாய்க்கு உணக்கையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.செய்வதும் எளிது.ருசியானதும் கூட. தேவையான பொருட்கள்: தனியா/கொத்துமல்லி விதை: ஒரு கைப்பிடி அளவு தேங்காய் : 3 கீற்று புளி : நெல்லிக்காய் அளவு உரித்த பூண்டு : 10 பல் காய்ந்த மிளகாய் : 6 நல்லெண்ணெய் : 1 டீஸ்பூன் உப்பு … Continue reading தனியா/கொத்துமல்லி விதை துவையல்

பருப்பு கொத்துமல்லி சட்னி

எளிதான ரெசிப்பியாயிற்றே.. இதையேன் பதிவேற்றுகிறேன்?. என் மகன்களைப் போன்று சமையல் கலையில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்காக எளிய சட்னி,துவையல் வகைகளை பதிவேற்ற உத்தேசம்.✌ மிகவும் நலம் பயக்கும் ஆதலால் கொத்துமல்லியை முடிந்த வரை தினமுமே உணவில் சேர்த்தல் அவசியம். தேவையான பொருட்கள் : தேங்காய் - 2 கீற்று உளுந்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அல்லது கால் ஆழாக்கு காய்ந்த மிளகாய் - 6 புளி - நெல்லிக்காய் அளவு கொத்துமல்லி - ஒரு கட்டு நல்லெண்ணெய் … Continue reading பருப்பு கொத்துமல்லி சட்னி

சிமிலி உருண்டை

நெடுங்காலமாக கிராமங்களில் பரவலாக செய்யப்பட்டு வரும் ஒரு பிரபல பலகாரம் இது. எள்,வெல்லம்,வேர்க்கடலை, கேழ்வரகு என எல்லாமே ஆரோக்கியத்துக்கு உகந்த பொருட்களால் செய்யப்படுவது. மிகவும் சத்தும் சுவையுமுள்ளது. இரும்புச் சத்து மிகுந்த இந்த உருண்டையை அடிக்கடி செய்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.செய்வதும் எளிது. தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 250 g வெல்லம் - 150 g வெள்ளை எள் - 50g வேர்க்கடலை - 50g ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை நல்லெண்ணெய்/நெய் … Continue reading சிமிலி உருண்டை

குழம்புத் தூள்

இது ஒரு ஆல்பர்ப்பஸ் குழம்புத்தூளுக்கான ரெசிப்பி. புளிக்குழம்பு, மீன்குழம்பு,கறிக்குழம்பு, வத்தக்குழம்பு,சாம்பார், க்ரேவி, காய் வதக்கல்,வறுவல் என எல்லாவற்றிற்கும் உபயோகப் படுத்தலாம். அரைகிலோ மிளகாய் அளவுக்கு அளவுகள் சொல்லியிருக்கிறேன்.சற்று உறைப்பாகவே இருக்கும்.காரம் குறைவாக வேண்டுவோர் கொத்துமல்லி விதை அளவை(1/4 கி) சற்றே அதிகப் படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருள்கள் : குண்டுமிளகாய் : 1/2 கிலோ கொத்துமல்லி விதை : 1/2 கிலோ மிளகு : 50 g சீரகம் : 50g வெந்தயம் : 50g கடுகு … Continue reading குழம்புத் தூள்

சென்னாங்குன்னி இட்லி பொடி

சென்னாங்குன்னி என்பது பொடி இறால் வகையைச் சேர்ந்தது.இதனை உலரவைத்து உணவுவகைகளில் பயன்படுத்துவார்கள். கடலோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் விரும்பி உண்ணும் ஒரு பொடி வகை இது.பொதுவாக உளுந்து அரைத்து செய்யப்படும் சாதாரண இட்லிப்பொடியை விட உலர்ந்த சென்னாங்குன்னி சேர்த்தரைத்த பொடி சுவையும் மணமும் மிக்கது. தேவையான பொருள்கள் : உளுந்து - 200g (ஒரு ஆழாக்கு) உலர்ந்த சென்னாங்குன்னி - ஒரு ஆழாக்கு காய்ந்தமிளகாய் - 10-12 மிளகு - 1 tsp சீரகம் - 1tsp பூண்டு … Continue reading சென்னாங்குன்னி இட்லி பொடி

மட்டன் புளிக்குழம்பு

மட்டன் புளிக்குழம்பு எங்கள் குடும்பங்களில் பிரபலமாக செய்யப்படும் ஒரு குழம்பு வகையாகும். குருமா,க்ரேவி, போன்றவை அலுத்துப் போகும் நேரங்களில் இதை செய்வதுண்டு. கறிச்சாறு இறங்கிய குழம்பில் சேர்க்கப்பட்டு ஊறிய காய்கறிகள் உண்பதற்கு அத்தனை சுவையாக இருக்கும். தேவையான பொருள்கள் : மட்டன் : அரை கிலோ கருணைக்கிழங்கு - 200g முருங்கைக்காய் - 2 கத்தரிக்காய் - 200 g சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 2 பச்சைமிளகாய் -2 தேங்காய் கீற்று -3 … Continue reading மட்டன் புளிக்குழம்பு

பொரியரிசி உருண்டை

நாகை மாவட்டத்து வேளாங்கண்ணி நகரில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் ஒரு இனிப்பு வகை இது. வறுத்த புழுங்கலரிசியில் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் இந்த பொரியரிசி உருண்டை மிகவும் சுவையானது.சத்துள்ளது.செய்வதற்கும் மிகவும் எளிது.மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். தேவையான பொருள்கள் : புழுங்கல் அரிசி : 200 g வெல்லம் : 350 g தேங்காய் : அரை மூடி ஏலக்காய்த்தூள் : சிறிதளவு நெய் : 25 g செய்முறை : 1.தேங்காயை துருவலாகத் துருவி … Continue reading பொரியரிசி உருண்டை

மட்டன் பருப்புக் குழம்பு

மட்டன் பருப்புக்குழம்பு எங்கள் வீட்டில் பிரபலமான ஒரு யூனிக் ரெசிப்பி.. அம்மாவிற்கு பின் இதை செய்வதையே நெடுங்காலம் மறந்திருந்தேன்.என் மச்சினரின் மனைவி சமீபத்தில் ஒருமுறை இதை அருமையாக செய்திருந்தபோது திரும்பவும் நினைவுக்கு வந்துவிட்டது. இதை மட்டன் தால்ச்சாவுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளவேண்டாம். தேவையான பொருள்கள்: மட்டன் - 1/2 கிலோ துவரம்பருப்பு - 100g மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் குழம்புமிளகாய்த்தூள் -4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் புளி … Continue reading மட்டன் பருப்புக் குழம்பு